search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து கழகங்கள்"

    டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு ஈடுசெய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வரலாறு காணாத டீசல் விலை உயர்வு காரணமாக அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. அரசுப் போக்குவரத்துக்கழகங்களின் இழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை ஈடுகட்ட அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

    கடந்த ஜனவரி மாதம் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டபோது, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.65.83 ஆக இருந்தது. இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.72.97 ஆகும். கடந்த 4½ மாதங்களில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.7.14 உயர்ந்துள்ளது. இதனால், அரசுப் போக்குவரத்துக்கழக பஸ்களை இயக்குவதற்கான செலவு கிலோ மீட்டருக்கு 34 ரூபாயில் இருந்து 45 ரூபாயாக அதிகரித்து உள்ளது. இதில் டீசலுக்கான செலவு மட்டும் கிலோ மீட்டருக்கு 9 ரூபாயில் இருந்து 13 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

    டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் அரசுப் போக்குவரத்துக்கழகங்களின் இயக்கச் செலவு தினமும் ரூ.6 கோடி அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இதனால், அரசு போக்குவரத்துக்கழகங்களின் இழப்பு மேலும் அதிகரித்திருக்கிறது. இதை ஈடுசெய்வதாக கூறி ஊரகப் பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் உள்பட ஆயிரக்கணக்கான பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டிருக்கிறது.

    இதன் மூலம் அரசு பஸ்கள் உள்பட ஆயிரக்கணக்கான பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அரசு பஸ்களின் இயக்க தூரம் தினமும் 15 லட்சம் கிலோ மீட்டர் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பஸ் வசதியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் எனப்படுபவை சேவை நோக்கத்துடன் நடத்தப்படுபவை ஆகும். தொலைதூரப் பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் மூலம் வருவாய் கிடைக்காது என்பதாலும், பல்வேறு பிரிவினருக்கு இலவச பஸ் பயண அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாலும் போக்குவரத்துக்கழகங்களுக்கு இழப்பு ஏற்படும். இந்த இழப்பையும், டீசல் கட்டண உயர்வால் ஏற்படும் இழப்புகளையும் தமிழக அரசு தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

    இதைத் தடுப்பதற்காக டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்துக்கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய அரசு முன்வர வேண்டும். போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கான நிலுவைத்தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×